பூவிருந்தவல்லி சட்டப்பேரவை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், திருத்தம், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தல், நீக்கம் போன்றவை குறித்தும், 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகம் முதல் பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் வரை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று (நவம்பர் 22) நடைபெற்றது.
இப்பேரணிக்கு பூவிருந்தவல்லி வட்டாட்சியர் குமார் தலைமை தாங்கினார். அப்போது, பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து எடுத்துரைத்ததோடு, பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் சரியாக உள்ளதா? எனவும் சரிபார்க்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளுக்கு வட்டாட்சியர் வழங்கினார்.