சென்னையில் பூந்தமல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இவரது குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நுழைவு வாயில், வெளியே செல்லும் இடங்கள், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இரும்புத் தகடுகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கம் யாரும் வெளியே செல்லாத வகையிலும் வெளியாள்கள் யாரும் உள்ளே வராத வகையிலும் தடுப்புகள் வைத்துள்ளனர்.

மேலும், இவருடன் நிறுவனத்தில் தொடர்பிலிருந்த நபர்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு அவர்களையும் தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை அளிக்கச் செல்லும் மாணவர்கள் புகார்: அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் இடமாற்றம்