ETV Bharat / state

பூந்தமல்லியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி! - பூந்தமல்லி திமுக வேட்பாளர் வெற்றி

திருவள்ளூர்: பூந்தமல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

DMK
DMK
author img

By

Published : May 3, 2021, 5:24 PM IST

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே.2) வெளியானது. இதில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டதிற்கு உட்பட பூந்தமல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், தற்போதுள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினரான கிருஷ்ணசாமிக்கும் - அதிமுக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் ராஜமன்னருக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வந்தது.

முதல் சுற்று தொடங்கியதும், முதல்சுற்றுலேயே அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் இருந்து வந்தது. இந்த நிலவரம் இறுதி சுற்று வரை நீடித்து. இந்த நிலையில், திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 94ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஏழுமலை ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின் சசிகலாவின் அணிக்குச் சென்றார்.

இதனால் அவரை அதிமுகவினர் தகுதி நீக்கம் செய்தனர். இதனால் பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் போது திமுக சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, கரோனாவால் கிருஷ்ணசாமி பாதிக்கப்பட்ட நிலையில் பரப்புரைக்கு முழுமையாக பங்கேற்க முடியாமல் போனது. இருப்பினும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட சுமார் 94 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.