ETV Bharat / state

அழுகிய நிலையில் வீட்டில் இறந்து கிடந்த முதியவர் - போலீசார் விசாரணை - 78 year old men

சென்னை: போரூர் அருகே தனியாக வீட்டில் வசித்து வந்த முதியவர் ஒருவர் ம்ர்மமான முறையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்தச்சியில் ஆழ்த்தியுள்ளது.

police investigation
author img

By

Published : Jul 21, 2019, 11:47 PM IST

போரூர் அருகே மதனந்தபுரம் குறிஞ்சி தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கரன்(78). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். தனது கீழ் வீட்டை வாடகைக்கு விட்டு மேல் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இன்று இவரது வீட்டில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக, அக்கம்பக்கத்தினர் பாஸ்கரனின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது மகன் மகேந்திரபிரபு வந்து பார்த்தபோது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாஸ்கரன் கழுத்து இறுக்கப்பட்டு அழுகிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு காவல்துறையினர் இறந்து கிடந்த பாஸ்கரன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இறந்தவர் வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர்

பாஸ்கரன் தனது மனைவி சுசிலாவை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவர் இறந்த நேரத்தில் காவலாளி மணி என்பவரையும் காணவில்லை. எனவே, அவர்தான் கொலை செய்து விட்டு 3 சவரன் நகை, மோட்டார் சைக்கிளை கொள்ளை அடித்து சென்றிருப்பார் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Intro:போரூர் அருகே முதியவரை கொலை செய்து விட்டு நகை, மோட்டார் சைக்கிள் கொள்ளை. அழுகிய நிலையில் உடலை மீட்டதால் பரபரப்பு.
Body:போரூர் அடுத்த மதனந்தபுரம், வி.என்.டி. அவென்யு, குறிஞ்சி தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் பாஸ்கரன்(78), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் கீழ் வீட்டை வாடகைக்கு விட்டு மேல் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று இவரது வீட்டில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலையடுத்து அவரது மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மகன் மகேந்திரபிரபு வந்து பார்த்தபோது வீடு வெளிப்புறமாக பூட்டப் பட்டிருந்தது பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாஸ்கரன் கழுத்து இறுக்கப்பட்டு அழுகிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த பாஸ்கரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
Conclusion:விசாரணையில் பாஸ்கரன் தனது மனைவி சுசிலாவை பிரிந்து தனியாக இந்த வீட்டில் வசித்து வந்தார். இவரது மூத்த மகன் வெளிநாட்டிலும் இளைய மகன் சென்னையிலும் உள்ளனர். கீழ் வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை கொண்டு பாஸ்கரன் இருந்து வந்தார். கடைசியாக பாஸ்கரனை செவ்வாய்க்கிழமை பார்த்துள்ளனர். அதன்பிறகு பார்க்கவில்லை மேலும் இங்கு பணிபுரிந்து வந்த காவலாளி மணி என்பவரையும் காணவில்லை எனவே அவர் கொலை செய்து விட்டு 3 சவரன் நகை, மோட்டார் சைக்கிளை கொள்ளை அடித்து சென்றாரா என்ற கோணத்திலும் அல்லது பாஸ்கரன் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு மர்ம நபர்கள் வேறு யாராவது கொலை செய்து விட்டு நகை, மோட்டார் சைக்கிளை கொள்ளை அடித்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.