சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியின் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 7ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அண்ணா பல்கலைக்கழக ரேங்க் பட்டியலில் இடம்பெற்ற 194 மாணவர்கள் உள்பட 2,340 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், விபத்துகள் அதிகம் நடைபெறும் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் அவசர சிகிச்சை மையம் அமைக்கப்படும். ஸ்ரீபெரும்புதூரில் இன்னும் ஓரிரு வாரங்களில் அவசர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.