சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த பழஞ்சூர் கிராமத்தில் சுமார் 5 சென்ட் நிலம் அரசின் சார்பாக சமுதாய நலக் கூடம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், அதற்கான நிதியும் பங்கிடப்பட்டு வேலைகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் தனியார் வீட்டுமனை நிறுவனம் அரசால் அடையாளப்படுத்தப்பட்ட அந்த நிலத்தை சட்டவிரோதமாகக் கற்களை நட்டு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தனியார் வீட்டு மனை விற்பனையாளரிடம் கேட்கும்போது 2003ஆம் ஆண்டு இந்நிலத்தை தான் வாங்கியுள்ளதாக ஆவணங்களை காட்டியுள்ளார். எனவே ஊர் பொதுமக்கள் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அப்புகார் மனுவில் அரசு திட்டத்திற்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய ஆவணங்கள் எவ்வாறு தயாரிக்கபட்டது, மேலும் ஆக்கிரமிப்பை தடுத்து தங்களுக்கு சமுதாயநல கூடம் அமைத்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.