சென்னை: தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மூத்த மகன் கெளதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான சென்னை, விழுப்புரம் பகுதிகளில் உள்ள 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூலை 17ஆம் தேதி சோதனை நடத்தி இருந்தனர். 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடி கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது பொன்முடி, தனது பதவியின் மூலம் அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் முறைகேடாக செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த பொன்முடி, திமுக ஆட்சிக்கு வந்த பின் எம்எல்ஏ, எம்பிக்களுக்கான விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதனை நீதிமன்றம் தள்ளபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை நடத்த போதுமான ஆதராங்கள் இருப்பதாக கூறி நீதிமன்றம் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.
அதனைத் தொடர்ந்து விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி கௌதம சிகாமணியும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், கடந்த ஜூன் மாதம் அந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து இந்த செம்மண் குவாரி முறைகேட்டில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கலாம் எனவும், இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் ஜூலை 17ஆம் தேதி காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படையினர் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 8 இடங்களிலும் சோதனை நடத்தினர். மேலும், அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் சைதாப்பேட்டையில் பொன்முடி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரிலிருந்து முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சென்னை வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத சுமார் 70 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது வங்கி இருப்பில் வைத்திருந்த 48 கோடி ரூபாயை அமலாக்கத் துறையினர் முடக்கினர். மேலும் அமைச்சர் பொன்முடியின் இளைய மகனான அசோக் சிகாமணிக்கு சொந்தமான மருத்துவமனையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
-
ED has conducted search operations under PMLA, 2002 on 17/07/2023 at seven locations connected to K. Ponmudy, a Member of the Legislative Assembly (MLA) and a serving Minister of Higher Education in the Government of Tamil Nadu, and his son, Gautam Sigamani, MP.
— ED (@dir_ed) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ED has conducted search operations under PMLA, 2002 on 17/07/2023 at seven locations connected to K. Ponmudy, a Member of the Legislative Assembly (MLA) and a serving Minister of Higher Education in the Government of Tamil Nadu, and his son, Gautam Sigamani, MP.
— ED (@dir_ed) July 18, 2023ED has conducted search operations under PMLA, 2002 on 17/07/2023 at seven locations connected to K. Ponmudy, a Member of the Legislative Assembly (MLA) and a serving Minister of Higher Education in the Government of Tamil Nadu, and his son, Gautam Sigamani, MP.
— ED (@dir_ed) July 18, 2023
இந்த சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை அவரது அரசு வாகனத்திலேயே அமர வைத்து சிஆர்பிஎப் பாதுகாப்புடன் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பாக 6 மணி நேரமாக நேற்று (ஜூலை 18) அதிகாலை வரை விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்தனர்.
இதேபோல சைதாப்பேட்டை இல்லம் மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து மீண்டும் நேற்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவருக்கும் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, எம்பி கௌதம சிகாமணி ஆகிய இருவரும் நேற்று மாலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தயார் செய்து வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு ஆம், இல்லை என பதில் கூற வைத்து துருவி துருவி விசாரித்து அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
6 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி எம்பி இரவு 10 மணியளவில் வீடு திரும்பினர். மேலும், மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அளித்தால் மீண்டும் ஆஜராக வேண்டும் என அமைச்சர் பொன்முடியின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்து உள்ளார்.