ETV Bharat / state

சமத்துவப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த சென்னை பூர்வகுடிகள்!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் ஒன்றாக கூடி சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

தெருவே கூடி சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாட்டம்

author img

By

Published : Jan 15, 2023, 12:18 PM IST

சமத்துவப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த சென்னை பூர்வகுடிகள்!

சென்னை: உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல் நாளான இன்று தைப் பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து, வீட்டின் முன்பு வண்ண கோலமிட்டு புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தங்கள் இல்லங்களில் அதிகாலையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள புலியூர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் ஒன்றாக கூடி சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். ஆள் உயர கரும்புகளை வைத்து, அதன் கீழ் விறகு அடுப்பு கூட்டி, பொங்கல் வைத்தனர்.

பானையில் இருந்து பொங்கல் பொங்கும் வேளையில் பாரம்பரிய முறைப்படி குலவையிட்டு ''பொங்கலோ பொங்கல்'' என்று உற்சாக குரல் எழுப்புகின்றனர். சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரும் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறி, பொங்கி வரும் பொங்கலைப் போன்று இந்தாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்று தாங்கள் வைத்த பொங்கலை இறைவனுக்குப் படைத்து வழிபட்டு வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து உறியடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. அதுமட்டுமின்றி பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் உள்ள புகழ்பெற்ற கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: மகளுக்காக 14 கி.மீ. தலையில் கரும்பு சுமந்து சென்ற தந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.