சென்னை துறைமுகத்திலிருந்து பூமிக்கு அடியில் இருந்து பைப் லைன் மூலம் திருவொற்றியூர் திருச்சினாப்குப்பம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு பாமாயில் சென்று கொண்டிருக்கிறது.
நேற்று முன்தினம் இரவு திடீரென பைப் லைனில் இருந்து பாமாயில் கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த ஆயிலானது காசிமேடு மீன்பிடி பகுதியில் உள்ள படகு பழுது பார்க்கும் இடத்தின் அருகே சுமார் 1 டன் எடையுள்ள பாமாயில் மிதந்து நின்றது. இதை கண்டறிந்த அப்பகுதி மீனவர்கள் இது குறித்து தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து எண்ணையை அகற்றும் பணியில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணெய் கொட்டிய இடத்தில் இன்று (செப்.28) ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து இந்த எண்ணெய் நிறுவனம் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகம் வழியாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தேனி வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு