சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் நேற்று (ஜூன்.19) பசுமை வழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பொதுக்குழு கூட்டம் உறுதியாக நடைபெறும். ஒற்றை தலைமை என்பது உறுதி.சுமார் நான்காண்டுக் காலத்திற்கு சிறப்பாக ஆட்சி செய்து மக்கள் நன்மதிப்பு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி ஏக மனதாகத் தேர்வு செய்யப்படுவார்" என்று கூறினார்.
இதனிடையே, அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்ஸின் கோட்டை வலுவிழக்கிறதா? ஈபிஎஸ்ஸை ஆதரித்த தேனி மாவட்ட அதிமுகவினர்!