ETV Bharat / state

கோவை மாணவி தற்கொலை வழக்கு: அரசியல் தலைவர்கள் கண்டனம் - கோவை மாணவி தற்கொலை வழக்கு

கோவையில் ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கமல் ஹாசன், டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் கண்டனம்
அரசியல் தலைவர்கள் கண்டனம்
author img

By

Published : Nov 13, 2021, 10:53 PM IST

Updated : Nov 17, 2021, 1:52 PM IST

கோயம்புத்தூர்: ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் போக்சோ மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் வழக்குகளின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டமாக அந்தத் தனியார் பள்ளியின் முதல்வர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவையில் தனியார் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி, ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளிக்குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அவசியம்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் மீது பாய்ந்தது போக்சோ

Last Updated : Nov 17, 2021, 1:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.