தமிழ்நாடு மின்சார வாரியம் ஊரடங்கு காலத்தில் அதிக கட்டணத்தை வசூலித்து கொள்ளையடிப்பதாக ஏற்கனவே நடிகர் பிரசன்னா குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு மின் வாரியம் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் எவ்வாறு மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது என பத்திரிகை செய்தி மூலம் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து நடிகர் பிரசன்னா தனது கருத்தால் மின் ஊழியர்களின் மனம் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்காக வருத்தப்படுவதாகக் கூறியிருந்தார். தற்போது இதன் தொடர்ச்சியாக சென்னையைச் சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பதிவில்.,
-
Just checked my electricity bill. It is 4 times higher than what I paid in March.Never ever has it been this much. #TNEB needs to revisit their calculation formula as so many have been saying.
— Sumanth Raman (@sumanthraman) June 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Just checked my electricity bill. It is 4 times higher than what I paid in March.Never ever has it been this much. #TNEB needs to revisit their calculation formula as so many have been saying.
— Sumanth Raman (@sumanthraman) June 5, 2020Just checked my electricity bill. It is 4 times higher than what I paid in March.Never ever has it been this much. #TNEB needs to revisit their calculation formula as so many have been saying.
— Sumanth Raman (@sumanthraman) June 5, 2020
"மார்ச் மாத மின் கட்டணத்தை விட நான்கு மடங்கு கட்டணம் தன் வீட்டிற்கு அதிகமாக வந்துள்ளது, இதற்கு முன் இப்படி மின் கட்டணம் உயர்ந்ததை தான் பார்க்கவில்லை, பலரும் கூறுவது போல் மின் கட்டணம் உயந்துள்ளதால், மின் வாரிய அலுவலர்கள் தனக்கு விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை மீண்டும் சரி பார்க்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளை அடிக்கிறது - நடிகர் பிரசன்னா