ETV Bharat / state

குடும்பத் தகராறு காரணமாக காவலர் விஷம் குடித்து தற்கொலை! - காவல்துறை விசாரணை

சென்னை: செம்பியம் அருகே குடும்பத் தகராறு காரணமாக காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Policeman commits suicide by drinking poison due to family dispute

author img

By

Published : Jul 18, 2020, 12:01 AM IST

சென்னை செம்பியம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர், ஜோசப் (37). இவர் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜெகதீஷ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஜோசப் பணியிலிருந்தபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கடந்த மே மாதத்திலிருந்து மருத்துவ விடுப்பில் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜோசப் மற்றும் ஜெகதீஷ்வரிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஜெகதீஷ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாகவும் தெரிகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த காவலர் ஜோசப், நேற்று (ஜூலை 17) காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின் மயக்கமடைந்திருந்த ஜோசப்பை கண்ட அவரது சகோதரர் ஜான்சன் என்பவர், மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு காவலரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின் இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.