சென்னை: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கணினி பிரிவில் பணியாற்றிவரும் தட்டச்சு அமைச்சு பெண் பணியாளருக்கு, அதே காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றிவந்த வெங்கடேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர், இது குறித்து தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திரன் நாயரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வெங்கடேசனை எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம்செய்து, இணை ஆணையர் உத்தரவிட்டார்.
மேலும், பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வெங்கடேசனிடம் அலுவலர்கள் துறை ரீதியிலான விசாரணை நடத்திவந்த நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே பைக் வீலிங் செய்த இளைஞர்கள்