சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷபி. இவர், தான் ஆசையாக வளர்த்து வந்த சேவலைக் காணவில்லை என வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் முன்னதாகப் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் பேரில் காவல் துறையினர் சேவல் திருடிய அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சேவலை பிடித்துச் சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து கண்காணிப்புக் கேமராவில் பதிவான இருசக்கர வாகனப் பதிவு எண்ணை வைத்து, சேவல் திருடியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஏற்கனவே வடசென்னையில் ஆடுகள் ஆட்டோக்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டு வந்த நிலையில், தற்போது சேவல்களைக் குறிவைத்து திருட்டுகள் நடைபெறத் தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கணவர், மனைவி ஒரேநேரத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்பு!