ETV Bharat / state

செல்போன் திருட்டு; மீட்டுக்கொடுத்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்த சின்னத்திரை நடிகர்! - latest tamil news

சென்னை அருகே திருடு போன செல்போனை மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு சின்னத்திரை நடிகர் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

காவல்துறைக்கு நன்றி தெரிவித்து சின்னத்திரை நடிகர் வெளியிட்ட வீடியோ

author img

By

Published : Jan 25, 2023, 1:58 PM IST

காவல்துறைக்கு நன்றி தெரிவித்து சின்னத்திரை நடிகர் வெளியிட்ட வீடியோ

சென்னை: புழுதிவாக்கம் பாலாஜி நகரை சேர்ந்தவர் அழகப்பன்(33). சின்னத்திரை நடிகரான இவர், வந்தாள் ஸ்ரீதேவி, ஒரு ஊருல ராஜகுமாரி, ஆனந்தராகம் உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலின் படப்பிடிப்பானது நேற்று முன் தினம் பெரம்பூரில் உள்ள ரேவதி டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையில் நடந்துள்ளது.

அப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட அழகப்பன், தனது செல்போனை கடையில் உள்ள டேபிளில் வைத்து ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார். பின்னர் ஷுட்டிங் முடிந்த பின்பு வைக்கப்பட்ட செல்போனை, அழகப்பன் எடுக்க வந்த போது செல்போன் காணாமல் போயுள்ளது. பல இடங்களில் தேடியும் செல்போன் கிடைக்காததால் துணிக்கடை நிர்வாகத்தினரிடம் அழகப்பன் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நிர்வாகத்தினர் கடையினுள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, துணி வாங்குவதற்காக வாடிக்கையாளர் போல வந்த இரு பெண்கள், ஊழியர்களிடம் துணி வாங்குவது போல பேச்சு கொடுத்து அழகப்பனின் செல்போனை லாவகமாகத் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

பின்னர் 60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடுப்போனது தொடர்பாக நடிகர் அழகப்பன் திருவிக நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து செல்போனை திருடிச்சென்ற இரு பெண்களை தேடி வந்தனர். இந்த நிலையில் செல்போன் திருடு போனது தொடர்பாக சின்னத்திரை நடிகர் அழகப்பன் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.

பின்னர் ஊடகங்களில் செல்போனை திருடிய பெண்களின் அடையாளங்களுடன் கூடிய செய்தி வெளியானது. இதனால் அச்சமடைந்து செல்போனை எடுத்துச் சென்ற பெண்கள் காவல்துறையிடம் செல்போனை ஒப்படைத்து விட்டு மன்னிப்பு கோரி உள்ளனர். தெரியாமல் எடுத்து விட்டதாக காவல் துறையினரிடம் பெண்கள் கூறியதாலும், செல்போன் கிடைத்து விட்டதாலும் நடவடிக்கை ஏதும் தேவையில்லை என சின்னத்திரை நடிகர் அழகப்பன் தெரிவித்தார்.

இதனையடுத்து இரண்டு பெண்களையும் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்தில் செல்போனை மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து அழகப்பன் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் செல்போன் துரிதமாக மீட்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: CCTV: சின்னத்திரை நடிகரின் செல்போனை திருடிச்சென்ற 2 பெண்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.