ETV Bharat / state

பேருந்தை மறித்து ரீல்ஸ் செய்த மாணவர்கள்; நூதன தண்டனை ரெடி - chennai police

சென்னையில் ஓடும் பேருந்தை மறித்து ரீல்ஸ் வெளியிட்ட பள்ளி மாணவர்களுக்கு நூதன முறையில் சென்னை காவல்துறை தண்டனை வழங்கவுள்ளது.

பேருந்தை மறித்து ரீல்ஸ் செய்த மாணவர்கள்
பேருந்தை மறித்து ரீல்ஸ் செய்த மாணவர்கள்
author img

By

Published : Nov 3, 2022, 3:07 PM IST

சென்னை: வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், இரண்டு பள்ளி மாணவர்கள், ஓடும் மாநகரப்பேருந்தை தடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் குறித்தும், பொதுமக்களே வீடியோ எடுத்து சமூக வலைதளம் மூலம் காவல் துறையினருக்கு புகார் அளித்து வருகின்றனர். வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் சென்னை காவல்துறையின் சமூக வலைதளப்பக்கத்தை இணைத்து, புகார் அளிக்கும்போது, காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த அடிப்படையில் சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், லைக்ஸ்க்காகவும் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தான வீடியோக்களும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் செய்து வீடியோவாக வெளியிடுவது அதிகமாகி வருகிறது.

பேருந்தை மறித்து ரீல்ஸ் செய்த மாணவர்கள்; நூதன தண்டனை ரெடி

அந்த வகையில், இரண்டு பள்ளி மாணவர்கள் மாநகரப்பேருந்து வரும்போது வழி மறித்து, சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடும் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து, இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னை காவல்துறை சமூக வலைதளப்பக்கத்தை இணைத்து பலர் புகார் அளித்துள்ளனர். இந்தப்புகாரின் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இன்ஸ்டாகிராம் ரீல் வெளியிட்ட 2 பள்ளி மாணவர்களையும் காவல் துறையினர் பிடித்து விசாரித்து, இருவரையும் எச்சரித்து மீண்டும் இதுபோன்று செயல்களில் ஈடுபடாதவாறு நூதன தண்டனை வழங்கவுள்ளனர். அதாவது அவர்களை, இரண்டு நாட்கள் போக்குவரத்து சீர் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்போவதாக சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்திற்காக சதுரங்கப்பலகை போல் வண்ணம் தீட்டப்பட்டு இருந்த நேப்பியர் பாலத்தின் பக்கவாட்டு வளைவு சுவர் மீது ஏறி நடந்தவாறு, ஆபத்தான முறையில் இளைஞர்கள் சிலர் வீடியோ பதிவிட்டு, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்தும் சென்னை காவல்துறை சமூக வலைதளப்பக்கத்தை இணைத்து பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் அண்ணா சதுக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று பொதுமக்களைப்பாதிக்கும் வகையிலும், போக்குவரத்தினைப்பாதிக்கும் வகையிலும் ஆபத்தான முறையில் வீடியோக்கள் எடுக்கக்கூடாது என இளைஞர்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: பட்டா கத்தியை சாலையில் உரசியபடி செல்லும் மாணவர்கள் - வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.