கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுமக்களை வீட்டுக்குள் இருக்க வைக்க காவல் துறையினர் கடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு மாநிலங்களிலும் தடை உத்தரவை மீறி வெளியே வரும் பொதுமக்களுக்கு பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கி வருகிறார்கள். தற்போது, சென்னை காவல் துறையினர், கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய யுக்தியை கையாண்டுள்ளனர்.
அதாவது இன்று அண்ணா சிலை அருகே உள்ள வாலாஜா சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களை விசாரணை செய்துவிட்டு அவர்களின் கைகள், இருசக்கர வாகனத்திலும் மஞ்சள் வண்ண பெயிண்ட் அடித்து அனுப்பி வருகிறார். இதனால் பொதுமக்கள் அடிக்கடி அத்தியாவசிய தேவைகள் என்று பொய் சொல்லிவிட்டு வெளியே வர முடியாது என்பதற்காகவும், மீறி வந்தால் இந்த பெயிண்டை வைத்து கண்டுபிடித்து அவர்களின் மீது வழக்குப் பதிவு செய்வோம் என்றும் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு