சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையரின் ஓட்டுநராக பணிபுரிந்தவர் காவலர் மனோஜ் குமார். 27 வயதான இவர், 2017ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். இவரது தந்தை தனபாலும் போரூர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிகிறார்.
காவலர் மனோஜ் குமார் நேற்றிரவு பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் செல்லும்போது, எதிரில் வந்த கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், காரை ஓட்டி வந்த திருஞானசம்பந்தன் என்பவரை கைது செய்தனர்.
தற்போது, இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், காவலர் மனோஜ் இருசக்கர வாகனத்திலிருந்து இடறி விழுவதும், அப்போது எதிரே வந்த கார் ஏறியதில் மனோஜ் குமார் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. சாலையில் கிடந்த மணல் காரணமாகவே பைக்கிலிருந்தி மனோஜ் குமார் இடறி விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: காவல் துறையினர் தொல்லை தாங்கல - தற்கொலைக்கு முயன்ற ரவுடி