எழும்பூரில் செயல்பட்டு வந்த சென்னை காவல் ஆணையரகம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. 1842ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம் என்பதால் அவற்றை மரபு சார்ந்த முறையில் புணரமைத்து காவல்துறைக்கான அருங்காட்சியகமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆங்கிலேயர் காலத்தில் காவல்துறை பயன்படுத்திய வழக்கு ஆவணங்கள், தடயங்கள், பழமையான துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருள்களை அருங்காட்சியகத்தில் வைக்கவும், பல்வேறு மாநிலங்களிலிருந்து காவல்துறை பயன்படுத்திய அரிய பொருள்களை சேகரித்து காட்சிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வந்த புணரமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியதால், பணிகள் குறித்து தமிழ்நாடு டிஜிபி திரிபாதி கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்து அருங்காட்சியகத்தில் வைக்கபட வேண்டிய பொருள்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் புணரமைக்கும் பணிகள் முழுவதுமாக நிறைவடையவுள்ளதால், காவலர் அருங்காட்சியத்தை வரும் 27ஆம் தேதி திறக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பொழுதைக் பயனுள்ளதாக மாற்ற எழும்பூர் அருங்காட்சியம் வாருங்கள்...