ETV Bharat / state

சீமானுக்கு எதிரான புகாரில் விஜயலட்சுமியிடம் 2வது நாளாக விசாரணை.. சிரித்த முகத்துடன் சென்றதன் காரணம் என்ன? - நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார்

police investigation by Actress Vijayalakshmi: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில், 2வது நாளாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

police investigation by Actress Vijayalakshmi
விஜயலட்சுமியிடம் 2வது நாளாக விசாரணை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 11:10 AM IST

சீமானுக்கு எதிரான புகாரில் விஜயலட்சுமியிடம் 2வது நாளாக விசாரணை

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதாவது தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும், சீமானை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார்.

அந்த மனுவில், "கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் தன்னை திருமணம் செய்து கூறி ஏமாற்றிவிட்டார் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். அதன் அடிப்படையில் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் அப்போதைய தலைவராக இருந்த தடா சந்திரசேகர் மூலமாக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சமாதானம் செய்ததாகவும், அதனை நம்பி வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சீமான் கூறியவாறு நடந்து கொள்ளாமல், தன்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாகவும், ஆகையால் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அவர் மீது பதியப்பட்ட வழக்கை, மீண்டும் விசாரணை செய்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது புகார் மனுவில் நடிகை விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டதன் பேரில், கோயம்பேடு துணை ஆணையர் கடந்த 2 நாட்களாக விஜயலட்சுமி கொடுத்த புகார் கோப்புகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் ஆக.31 ஆம் தேதி சென்னை ராமாபுரம் காவல் நிலையத்திற்கு விஜயலட்சுமியை நேரடியாக வரவழைத்து சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

முன்னதாக பதியப்பட்ட இவ்வழக்கின் ஆவணங்களையும், சீமானுடன் விஜயலட்சுமி தொடர்பில் இருந்தது குறித்த ஆதாரங்களையும் பெற்றுக் கொண்ட போலீசார் மீண்டும் விசாரணையானது நடைபெறும் என தெரிவித்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி முன்பு வாக்குமூலம் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து, மாலையில் மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டார். தற்போது கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் மீது பதியப்பட்டுள்ள வழக்கு பிரிவின் கீழ், பெண் வன்கொடுமை, கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விசாரணை முடிந்து சிரித்த முகத்துடன் வந்த விஜயலட்சுமி 2 கைகளை தூக்கி காட்டியபடி காவல் நிலையத்திலிருந்து வெளியே சென்றார். கடந்த ஆக.31ஆம் தேதி இதேபோல் இராமபுரம் காவல் நிலையத்தில் வைத்து நடிகை விஜயலட்சுமியிடம் நடந்த விசாரணை நடத்தப்பட்டது. நேற்று போல நேற்றுமுந்தினமும் போலீசார் விசாரணை முடிந்து பேட்டி அளிக்காமல் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "உங்க கடைக்கு தமிழில் பெயர் பலகை வைக்கலயா? - போச்சு போங்க!" - விரைகிறது நீதிமன்றத்தின் புது உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.