சென்னை: கோயம்பேடு சேம்பாத்தம்மன் நகர் 1ஆவது செக்டார் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (77). இவரது மகன் ஞானம் (55). இவருக்கு திருமணமாகவில்லை. தந்தை ரங்கநாதனுக்கு இதய பிரச்சினை இருந்தது. அவரது மகன் ஞானத்திற்கு சிறுநீரகப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
உறவினர்கள் யாரும் ஆதரவு கொடுக்காததால் நேற்று (மார்ச் 07) வீட்டில் ரங்கநாதன் மின்விசிறியிலும், அவரது மகன் ஞானம் ஜன்னல் கம்பியிலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்து கோயம்பேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர், இறந்து கிடந்த தந்தை, மகன் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டில் இருந்த தற்கொலை கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றினர்.
அதில், தங்களை கவனிக்க யாருமில்லாததால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை