ETV Bharat / state

சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை - சிசிடிவி காட்சி

தாம்பரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
author img

By

Published : Apr 15, 2022, 10:28 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதா. இவர் இணையதளத்தில் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுதா, அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்ததார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சுதா கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த சுதா இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார்.

சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து பட்டபகலில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் காருக்கு தீ வைப்பு - சிசிடிவியில் சிக்கிய இருவர் யார்? போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.