சென்னை மேற்கு அண்ணா நகர் கம்பர் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் எட்டு பேர் சேர்ந்து வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் யுபிஎஸ்சி தேர்வுக்கு சென்னையில் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு (ஆக.27) அவர்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் வீட்டின் கதவைத் திறந்து வைத்து அனைவரும் தூங்கியுள்ளனர்.
வழக்கம்போல் இன்று காலை அனைவரும் எழுந்துபார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 8 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் காணாமல் போனது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள், இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குடியிருப்புப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லட்சக்கணக்கில் கலப்பட டீசல் விற்பனை... திமுக வார்டு கவுன்சிலரின் கணவர் கைது