சென்னை: அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் கேசவன் (25). இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 22ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் எத்திராஜ்சாலை தபால் நிலையம் எதிரே உள்ள டீக்கடையில் சிகரெட் வாங்கி பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக காக்கி பேண்ட், டீ சர்ட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கேசவனை அழைத்து தான் ஒரு போலீஸ் அதிகாரி என்றும், பொது இடத்தில் புகைப்பிடிப்பது குற்றம் என தெரிவித்துள்ளார். மேலும் பொது இடத்தில் புகைப்பிடித்ததற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
![smoking in road side police home guard police home guard arrested police home guard arrested for extorting chennai news chennai latest news பொதுவெளியில் சிகரெட் இளைஞரிடம் 25000 பறிப்பு சிசிடிவியால் சிக்கிய ஊர்காவல் படை காவலர் ஊர்காவல் படை காவலர் சிகரெட் காவலர் கைது அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி காக்கி பேண்ட் டீ சர்ட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17024933_police.png)
இதனால் பயந்து போன கேசவன் அபராதம் செலுத்துவதாக ஒப்புக்கொண்டதுடன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், ஏடிஎம்மில் எடுத்து தருவதாக கூறிவிட்டு அருகில் உள்ள ஏடிஎம்மில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துவந்து அந்த நபரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட அந்த நபர் உடனே அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து கேசவன் அருகில் இருந்த நபர்களிடம் விசாரித்த போது, அப்படி யாரும் இவ்வளவு அபராதம் வசூலிப்பதில்லை என தெரிவித்துள்ளனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கேசவன் இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகன எண்ணை வைத்து அவரது விலாசத்தை கண்டு பிடித்தனர்.
![smoking in road side police home guard police home guard arrested police home guard arrested for extorting chennai news chennai latest news பொதுவெளியில் சிகரெட் இளைஞரிடம் 25000 பறிப்பு சிசிடிவியால் சிக்கிய ஊர்காவல் படை காவலர் ஊர்காவல் படை காவலர் சிகரெட் காவலர் கைது அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி காக்கி பேண்ட் டீ சர்ட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17024933_policee.png)
பின்னர் அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணத்தை பறித்து சென்ற இளைஞர் நெற்குன்றம் ஜெயராம் நகரை சேர்ந்த டான் ஸ்டுவர்ட் (32) என்பதும் இவர் ஊர்காவல் படையில் காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து ஊர்காவல் படை காவலர் டான் ஸ்டுவர்ட் மீது மோசடி, உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் காவலர் டான்ஸ்சிடம் இருந்து 24 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து கேசவனிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் ; காவல்துறை சோதனை