ETV Bharat / state

வளையல் பெட்டியில் மறைத்து கொரியர் மூலமாக ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயற்சி! - வளையல் பெட்டியில் மறைத்து கொரியர் மூலமாக விலையுயர்ந்த போதை பொருட்களை ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயற்சி

விலையுயர்ந்த மெத்த பெட்டமைன் மற்றும் ஆம்பிடமைன் போன்ற போதைப்பொருட்களை வளையல் பெட்டியில் மறைத்து கொரியர் மூலமாக சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை ஆஸ்திரேலியாவிற்குக் கடத்த முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

police-have-arrested-five-people-for-trying-to-smuggle-drugs-into-australia வளையல் பெட்டியில் மறைத்து கொரியர் மூலமாக விலையுயர்ந்த போதை பொருட்களை ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயற்சி

author img

By

Published : Jun 1, 2022, 5:13 PM IST

சென்னை: மண்ணடி பகுதியில் விலையுயர்ந்த போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதியின் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, தகவலின் பேரில் தனிப்படை போலீசாரும் மற்றும் துறைமுகம் உதவி ஆணையர் வீரகுமார் தலைமையிலான போலீசாரும் போதை பொருட்கள் வாங்குபவர்களைப் போல் மாறுவேடத்தில் சென்று, மண்ணடி பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ஜாகீர் ஹுசைன் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த தகவலின் பேரில் முகமது சுல்தான், நாசர், ஜுனைத் மற்றும் அசார் என 5 பேரை அடுத்தடுத்து போலீசார் கைது செய்தனர். அதன்பின் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கூலித்தொழில் உள்ளிட்டப் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் இவர்கள், விலையுயர்ந்த மெத்த பெட்டமைன் மற்றும் ஆம்பிடமைன் போன்ற போதைப்பொருட்களையும் மொத்த விற்றுவரும் தொழிலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் தற்போது 2 கிலோ மெத்த பெட்டமைன் மற்றும் 2.5 கிலோ ஆம்பிடைமைன் போதைப்பொருட்களை கொரியரில் சரக்கு விமானம் மூலம் இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாகப் போதைப்பொருட்களை வளையல் பெட்டிக்குள் மறைத்து, கொரியர் மூலமாக அனுப்பத்திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற சுமார் 1 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் வளையல் பெட்டிகளை கைது செய்யப்பட்ட அசார் லாட்ஜில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருட்களை விற்கப்பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 8 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

வளையல் பெட்டியில் மறைத்து கொரியர் மூலமாக விலையுயர்ந்த போதை பொருட்களை ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற 5 பேர் கைது

குறிப்பாக இவர்கள் வேலூரில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி வந்து, விற்பனையில் ஈடுபடுவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். வெளிநாட்டு நபர்களிடம் தொடர்பு கொண்டிருப்பதால் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச்சேர்ந்த முக்கிய 2 நபர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'அயன்' பட பாணியில் கேப்சூல் மூலம் போதைப்பொருள் கடத்திய நபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.