ETV Bharat / state

வேலைக்கு வந்த இடத்தில் மனநல பாதிப்பு - வடமாநில தொழிலாளர் ரயிலில் மரணம் - வடமாநில இளைஞர் மரணம்

ரயில் பயணத்தின் போது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல செயல்பட்டதால், கழுத்தை நெரித்து கட்டிய போது மூச்சு திணறல் ஏற்பட்டு வடமாநில நபர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

வேலைக்கு வந்த இடத்தில் மனநல பாதிப்பு - வடமாநில தொழிலாளர் ரயிலில் மரணம்

author img

By

Published : Aug 17, 2023, 2:37 PM IST

Updated : Aug 18, 2023, 9:29 AM IST

சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வடமாநில நபர் ரயிலில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல செயல்பட்டதால், கழுத்தை நெரித்து கட்டிய போது எதிர்பாரதவிதமாக மூச்சு திணறல் ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(25). இவர் உட்பட 10 பேர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பணியாற்றுவதற்காக வந்து உள்ளனர். அப்போது அங்கு பிரகாசுக்கு திடீரென மன நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பிரகாஷ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த செய்தி பிரகாசின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த பெற்றோர் அவரை உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளனர். இதனால் அவருடன் குவாரியில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் பிரகாசை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: இளைஞரை வெட்டிக் கொன்று ஆற்றில் வீச்சு.. தந்தை, மகள் உள்பட 8 பேர் கைது - தஞ்சாவூரில் நடந்தது என்ன?

அதன்படி உடன் பணியாற்றும் ராம்குமார் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரும் நேற்று பிரகாசை அழைத்து கொண்டு சத்தீஸ்கர் செல்வதற்காக ரப்திகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி புறப்பட்டுள்ளனர். ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த போது திடீரென பிரகாஷ் பயங்கரமாக கூச்சலிட்டு பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார் என கூறப்படுகிறது.

இதனால் ராம்குமார் மற்றும் சிறுவன் இணைந்து பிரகாஷின் கை, கால்களை கயிற்றால் கட்டியுள்ளனர். இருந்தபோதும் தொடர்ந்து பிரகாஷ் கூச்சலிட்டு வந்ததால், வேறு வழியின்றி சீட்டின் கீழ் படுக்க வைத்து அவரின் கழுத்தை துணியால் கட்டி இருக்கையில் கம்பியால் கட்டி உள்ளனர். அப்போது விபரீதமாக பிரகாஷின் கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு ரயிலிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ரயில் பயணிகள் அளித்த தகவலின் பேரில் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும் ரயில்வே போலீசார் உயிரிழந்த பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ராம்குமார் (35) மீது கொலை வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மக்கள் பணிகளை செய்ய விடாமல் திமுகவினர் மிரட்டல்? - இந்திய முஸ்லிம் லீக் புகார்!

Last Updated : Aug 18, 2023, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.