ETV Bharat / state

திருடுபோன செல்ஃபோன்கள்; உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் துறை! - சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்

சென்னை: பெருநகரிலுள்ள நான்கு காவல் மண்டலங்களிலும் காணாமல் போன மற்றும் திருடுபோன 1 கோடி ரூபாய் மதிப்பிலான 863 செல்ஃபோன்களை கண்டுபிடித்து, சென்னை காவல் ஆணையர் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

செல்ஃபோன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் துறை

author img

By

Published : Dec 22, 2020, 10:53 PM IST

Updated : Dec 22, 2020, 10:58 PM IST

சென்னை பெருநகரிலுள்ள நான்கு காவல் மண்டலங்களிலும் காணாமல்போன, திருடுபோன செல்ஃபோன்கள் பற்றிய வழக்குகளில் சைபர் குற்றப்பிரிவு காவல் குழுவினர், செல்ஃபோன் நிறுவனங்களின் உதவியுடன் சர்வதேச செல்ஃபோன் கருவி அடையாள குறியீட்டு எண்களை (IMEI) பயன்படுத்தி, அந்த செல்ஃபோன்களை தற்போது பயன்படுத்தி வரும் நபர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, தனிப்படை மூலம் அந்த செல்ஃபோன்களை சென்னை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

அதனடிப்படையில் வடக்கு மண்டலத்தில் 280 செல்ஃபோன்கள், மேற்கு மண்டலத்தில் 175 செல்ஃபோன்கள், தெற்கு மண்டலத்தில் 205 செல்ஃபோன்கள், கிழக்கு மண்டலத்தில் 203 செல்ஃபோன்கள் என மொத்தம் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 863 செல்ஃபோன்கள் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்டுபிடிக்கப்பட்ட செல்ஃபோன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பங்கேற்று செல்ஃபோன்களின் உரிமையாளர்களிடம் கண்டுபிடிக்கப்பட்ட செல்ஃபோன்களை ஒப்படைத்தார்.

பின்னர் பேசிய அவர், “செல்ஃபோன் திருட்டு என்பது சிறிய தவறாக தெரிந்தாலும், செல்ஃபோன் என்பது தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான ஞாபகமாக மாறிவிட்டது. அது தொலைந்துபோகும் பட்சத்தில் அது அவர்களை மனதளவில் மிகவும் பாதிக்கும். மேலும், சென்னை பெருநகர காவல் துறை பொதுமக்களுக்கு சேவை செய்ய நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இத்தகைய காணாமல், திருடுபோன செல்ஃபோன்களின் வழக்குகளையும் பொதுமக்களின் உணர்வினை புரிந்துகொண்டு கவனத்துடன் கையாள வேண்டும். அதுமட்டுமல்லாமல், பொதுமக்களும் தங்களின் செல்ஃபோன்களை பாதுகாப்பாக வைத்திப்பது மிக அவசியம். பொதுமக்களும் காவல் துறையின் மீது முழு நம்பிக்கை வைத்து தங்களை அணுகி பிரச்னைகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

செல்ஃபோன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் துறை
தொடர்ந்து பேசிய அவர், “புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இந்தாண்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளது. ஏற்கனவே அரசு அறிவித்துள்ளபடி மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகளிலும், உணவகங்களிலும், சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டின்போது தேவாலயங்கள், கோயில்களில் வழிபாடு நடத்த அறநிலையத் துறையுடனும், தேவாலய நிர்வாகங்களுடனும் கலந்தாலோசித்து எத்தனை பேர்களை அனுமதிக்கலாம் என்பதுபற்றி முடிவு செய்யப்படும். மேலும், புத்தாண்டின்போது சென்னையில் 144 அமலில் இருப்பதால் தடையை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: செல்ஃபோன் திருடிய நபரை கத்தியுடன் துரத்திய கும்பல்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

Last Updated : Dec 22, 2020, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.