ETV Bharat / state

'அன்புள்ள அப்பா' மாணவர்களுக்காக காவல் துறை நடத்தும் கடிதப் போட்டி! - fathers day letter writing competition

சென்னை: தந்தையர் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தங்களது தந்தைக்கு ‘அன்புள்ள அப்பா’ என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டியை சென்னை காவல் துறை நடத்துகிறது.

Fathers day  தந்தையர் தினம்  தந்தையர் தினக் கடிதம் எழுதும் போட்டி  fathers day letter writing competition  அன்புள்ள அப்பா
'அன்புள்ள அப்பா' மாணவர்களுக்காக காவல்துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டி
author img

By

Published : Jun 21, 2020, 1:18 AM IST

நாடு முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படவுள்ளதால், அதன்மூலம் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் சென்னை காவல் துறை இறங்கியுள்ளது. சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையும் கோடாக் மகிந்திரா வங்கியும் இணைந்து பள்ளிக் குழந்தைகளுக்கு 'அன்புள்ள அப்பா’ என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டியை நடத்துகின்றனர். 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் தங்களது தந்தையைப் பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்த காவல் துறை, கரோனா நோய் பரவாமல் இருக்க தங்களது தந்தை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைக் கடிதமாக எழுதி அதனை https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdC1uLF37AvoXRiqh0oRr_cYTDmPBTtJszXXBj6mS52uALArQ/viewform என்ற லிங்க் மூலம் காவல் துறைக்குப் பகிர வேண்டும் என்றும், அதில் சிறந்த கடிதம் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Fathers day  தந்தையர் தினம்  தந்தையர் தினக் கடிதம் எழுதும் போட்டி  fathers day letter writing competition  அன்புள்ள அப்பா
காவல்துறையின் அறிவிப்பு

மேலும், அக்கடிதத்தின் நகல் காவல் துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் கடிதத்தை எழுதிய குழந்தையின் பெயரோடு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தக் கடிதங்களை வருகிற 30ஆம் தேதிக்குள் பகிர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உறவினர்களால் கைவிடப்பட்ட பாட்டி: உதவிக்கரம் நீட்டிய ஃபேஸ்புக் நண்பர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.