ETV Bharat / state

'தேசியக் கொடி அச்சிட்ட முகக்கவசத்தைத் தடை செய்யக் கோரி புகார்' - dairy agents association

சென்னை: முகக்கவசங்களில் தேசியக் கொடியை அச்சிட்டு, விற்பனை செய்வதை, உடனடியாக தடை செய்ய வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் சார்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

'தேசிய கொடி அச்சிட்ட முகக்கவசத்தைத் தடை செய்யக் கோரி புகார்’

author img

By

Published : Aug 13, 2020, 7:06 PM IST

இந்தியாவின் 74ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, சுதந்திர தின விழாக்களின் போது, தேசியக் கொடி அச்சிட்ட தோரணங்கள் உள்ளிட்டவை பரவலாகப் பயன்படுத்தப்படும். தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் முகக்கவசத்தை அதிகம் பயன்படுத்தி வருவதால், அதையும் சில இடங்களில் வியாபார நோக்கில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதன் விளைவாக, முகக்கவசங்களில் தேசியக் கொடியை அச்சடித்து பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் முகக்கவசத்தை பயன்படுத்தி விட்டு குப்பைகளிலும், சாலைகளிலும் தூக்கி எறியும் சூழலில், இந்த விற்பனை தேசியக் கொடியை அவமதிக்கும் செயலில் முடிய வாய்ப்புகள் அதிகம்.

புகார்
புகார்

இதனைத் தடுக்கும் வகையில் முகக்கவசங்களில் தேசியக் கொடியை அச்சிட்டு விற்பனை செய்யத் தடை விதிக்க வேண்டும் எனவும்; அச்சிடப்பட்ட முகக்கவசங்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் சார்பாக காவல் ஆணையருக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா பரிசோதனை செய்ய மக்களை மிரட்டுவதாக பால் முகவர் சங்கம் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.