பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் பார்வேந்தன், ‘திருச்சியில் கடந்த மாதம் துக்ளக் பத்திரிக்கை ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை நீங்க எல்லாம் ஆம்பளையா எதற்கு இருக்கீங்க என்று பேசியதாகக் கூறினார். மேலும் அவரை அம்மா சமாதியில் தியானம் செய்யக் கூறியதும் நான் தான் என்று பேசியிருந்தார்.
அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அரசினை கலைக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்தவர் போல் பேசியிருக்கிறார். அதிமுகவில் நடந்த எல்லா மாற்றத்திற்கும் பின்னனியில் அவர் இருப்பது போல் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக ஆளுநரின் அதிகாரத்தில் தலையீடு செய்வதால் ஆடிட்டர் குருமூர்த்தியியை சட்டப்பிரிவு 124இன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யவேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்’ என்றார்.