ETV Bharat / state

நொச்சிக்குப்பத்தில் மீனவ சங்கத் தலைவர்கள் கைது! - நொச்சிக்குப்பத்தில் மீனவ சங்க தலைவர்கள் கைது

சென்னை நொச்சிக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசின் குடியிருப்பு வீடுகளை மீனவர்களுக்கு வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற மீனவர் சங்கத் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

Police
சென்னை
author img

By

Published : Apr 30, 2023, 7:47 PM IST

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டன. அந்த குடியிருப்புகள் அருகே இப்போது புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதில் உள்ள 324 வீடுகளை தங்களுக்கே ஒதுக்கீடு செய்து தர வேண்டும் எனக்கோரி, நொச்சிக்குப்பம் மீனவர்கள் கடந்த சில நாட்காக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினர் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும், மீனவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.

இந்த நிலையில், நான்காவது நாளாக இன்றும்(ஏப்.30) நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் மீனவர்களை கைது செய்தனர். அதேபோல், நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட முயன்ற மீனவர் சங்கத் தலைவர்களையும் போலீசார் கைது செய்தனர். தென்னிந்திய மீனவ நல சங்கத் தலைவர் பாரதி, அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவர் ரூபேஷ் குமார், மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், மீனவ சங்கத் தலைவர்களான ரூபேஷ் குமார், பாரதி, ரவிக்குமார் உள்ளிட்டோர் அரசு அதிகாரிகளை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக, உதவி நிர்வாக பொறியாளர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மீனவ சங்க தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு: படகுகளுடன் போராட்டத்தில் இறங்கிய சென்னை மீனவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.