ETV Bharat / state

Instagram-ல் பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் - ஜகா வாங்கிய கதை! - கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வீடியோ

இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்-க்கு ஆசைப்பட்டு கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளைஞரை காவல் துறையினர் பிடித்து மன்னிப்பு கேட்கவைத்த வீடியோ வெளியாகியுள்ளது.

பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர்

author img

By

Published : Feb 4, 2022, 5:30 PM IST

சென்னை: சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வினீத். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.

அந்த வீடியோவில், கையில் பெரிய கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு, கானா பாடல் ஒன்றை வினீத் பாடுவது பதிவாகி இருந்தது. இதனை மற்ற சமூக வலைதளப்பக்கங்களிலும் வினீத் பதிவிட்டு வைரல் செய்தார்.

கத்தியுடன் வீடியோ பதிவிடுவது வன்முறையைத்தூண்டுவது போல் உள்ளதால், இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் துறை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், வீடியோ பதிவிட்ட வினீத்தை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (பிப். 04) வினீத்தை பிடித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், வினீத் மீது எந்த வழக்கும் இல்லை என்பது தெரியவந்தது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகமானோர் பின்தொடர வேண்டும் என்றும்; லைக்ஸ் கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டு கத்தியுடன் வீடியோ பதிவிட்டதாக வினீத் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வினீத்தை எச்சரித்த காவல் துறையினர், இதுபோன்று வீடியோக்களை இனி சமூக வலைதளங்களில் பதிவு செய்ய மாட்டேன் எனக் கடிதம் எழுதி வாங்கினர்.

வினீத்தின் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட வன்முறையைத்தூண்டக்கூடிய வகையிலுள்ள அனைத்து வீடியோக்களையும் காவல் துறையினர் பதிவு நீக்கம் செய்துள்ளனர்.

பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர்

மேலும், “லைக்ஸ், ஃபாலோவர்ஸ்-க்காக ஆசைப்பட்டு இது போன்ற வீடியோவை பதிவிட்டு விட்டேன். மன்னித்துவிடுங்கள். இது போன்று யாரும் செய்யாதீர்கள்" என்று கூறி வினீத் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்புக்கேட்ட வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுபோல், ஆயுதங்களைக் கொண்டு சமூக வலைதளங்களில் வீடியோ செய்யும் பதிவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் டெலிவெரி ஊழியர் வெட்டிக் கொலை..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.