ETV Bharat / state

செல்ஃபோன் கொள்ளையர்களை பொறி வைத்து பிடித்த காவல்துறை! - கொள்ளை

சென்னை: செல்ஃபோன் பறிப்பு கொள்ளையில் ஈடுபட்டுவந்த கொள்ளை கும்பலை காவல்துறையினர் பொறி வைத்து பிடித்துள்ளனர்.

File pic
author img

By

Published : May 13, 2019, 10:25 PM IST

சென்னை பாண்டிபஜார், தியாகராய நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு செல்ஃபோன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு செல்ஃபோன் கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவரையும், சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்தனர். இதில், செங்குட்டுவன் மீது கேரளாவிலும் செல்ஃபோன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப அடிப்படையிலும் செல்ஃபோன்கள் எங்கே போனது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஹரி கிருஷ்ணன் என்ற திருட்டு செல்ஃபோன்களை வாங்கி விற்கும் தரகர் மூலம் தியாகராயநகர் சத்யா பஜாரில் செல்ஃபோன்கள் விற்பனை செய்தது தொியவந்தது.

அதிலும், குறிப்பாக ராஜாமுகமது என்கின்ற செல்ஃபோன் கடைக்காரர் திருட்டு செல்ஃபோன்களை மட்டும் வாங்கி விற்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, ஹரி கிருஷ்ணன், ராஜாமுகமது ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்து அவர்களிடம் இருந்து 18 செல்ஃபோன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் செல்போன்களை திருடியவர் ,அதை வாங்கியவர்  என ஒட்டு மொத்த கும்பலையும் பாண்டிபஜார் போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை பாண்டிபஜார் தியாகராய நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு செல்போன்கள் பறிப்பு நடைபெற்று வந்தது. இது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு செல்போன் பறிப்பு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தொழில்நுட்ப அடிப்படையிலும் செல்போன்கள் எங்கே போனது  என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த வழக்கில் நுங்கம் பாக்கத்தை சேர்ந்த செங்குட்டுவன் என்பவரையும், சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்தனர். செங்குட்டுவன் மீது கேரளாவில் ஏற்கனவே செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் ஹரி கிருஷ்ணன் என்ற திருட்டு செல்போன்களை வாங்கி விற்கும் தரகர் மூலம் தியாகராயநகர் சத்யா பஜாரில் செல்போன்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக ராஜாமுகமது என்கின்ற செல்போன் கடைக்காரர் திருட்டு செல்போன்களை மட்டும் வாங்கி விற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஹரி கிருஷ்ணன் மற்றும் ராஜாமுகமது ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 18 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.