சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமி, அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சில நாள்களாக அவ்வப்போது வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி இரண்டு மாதம் கருவுற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான திண்டிவனத்தை சேர்ந்த கல்லூரி மாணவரால், தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் கல்லூரி மாணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணம் நடக்க பூஜை செய்ய வேண்டும் - இரண்டு சவரனை அபேஸ் செய்த சில்வர் திருடன்