செங்கொடி சங்கம் சார்பில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களை காவல் துறையினர் கைதுசெய்து வேப்பேரி ராஜா அண்ணாமலை சாலையில் உள்ள தர்ம பிரகாஷ் கல்யாண மண்டபத்தில் அடைத்தனர்.
அப்போது முற்றுகையிட வந்தவர்களில் சிலர் மது குடித்துக் கொண்டிருந்ததால், பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் செந்தமிழ்ச்செல்வன் என்பவர் மது குடிக்கக் கூடாது என கூறியுள்ளார். இதனால் மது குடித்துக் கொண்டு இருந்தவர்களுக்கும் காவலர் செந்தமிழ் செல்வனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதில் அச்சங்கத்தைச் சேர்ந்த தேவராஜன் உள்பட நான்கு நபர்கள் காவலர் செந்தமிழ்ச்செல்வனை கையால் தாக்கியுள்ளனர். இதனால் உதட்டில் காயம் ஏற்பட்ட காவலர் கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதுகுறித்து வேப்பேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.