ETV Bharat / state

'2  பாம்புகள், 16 மரப்பல்லிகள், உடும்புகள்' - பயணி கூடையைத் திறந்து அதிர்ந்த சுங்கத்துறையினர்! - 2 பேரையும் சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தினர்

சென்னை: மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 2 விஷப்பாம்புகள்,  உடும்புகள்,16 மரப்பல்லிகள் உள்ளிட்டவை கடத்தி வரப்பட்ட நிலையில், அதனை பறிமுதல் செய்து இரண்டு பேரை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

lizard, python seized
author img

By

Published : Oct 10, 2019, 7:24 PM IST

மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 2 விஷப்பாம்புகள், உடும்புகள், 16 மரப்பல்லிகளைக் கூடைக்குள் வைத்து கடத்தி வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகுமது பா்வேஸ் (36), சிவகங்கையைச் சோ்ந்த முகமது அக்பா் (28) ஆகிய 2 பேரையும் சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தினர்.

பாம்புகள் மற்றும் உடும்புகளை மலேசியாவிற்கே திருப்பி அனுப்புவதா? அல்லது வனத்துறையிடம் ஒப்படைத்து கிண்டி பாம்பு பண்ணையில் விடுவதா என்று சுங்கத்துறை அலுவலர்கள், வண்டலூா் உயிரியல் பூங்கா விலங்கியல் மருத்துவா்கள் ஆகியோர் ஆலோசனை நடத்தினா்.

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு, மரப்பல்லிகள்

பின்னர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனா். அதன்படி நாளை அதிகாலை ஒரு மணிக்கு விமானத்தின் மூலம், இவையனைத்தும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருக்கலாம் என்று நினைத்து கூடைகளை திறந்து பாா்த்து சோதனையிட்ட போது, சீறிக்கொண்டு எழும்பிய பாம்புகளைக் கண்டு சுங்கத்துறையினா் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் ரூ.30.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

Intro:மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வந்த கொடிய விஷபாம்புகள் 2, மற்றும் உடும்புகள் மற்றும் மரப்பல்லிகள் 16 சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
Body:மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வந்த கொடிய விஷபாம்புகள் 2, மற்றும் உடும்புகள் மற்றும் மரப்பல்லிகள் 16 சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

பாம்புகளையும் சிறிய உடும்புகளையும் கூடைக்குள் வைத்து கடத்தி வந்த ராமநாதபுரத்தை சோ்ந்த முகுமது பா்வேஸ் (36), சிவகங்கையை சோ்ந்த முகமது அக்பா் (28) ஆகிய பயணிகள் 2 பேரை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.பாம்புகள் மற்றும் உடும்புகளை மலேசியாவிற்கே திருப்பி அனுப்புவதா? அல்லது வனத்துறையிடம் ஒப்படைத்து கிண்டி பாம்பு பண்ணையில் விடுவதா என்று சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வண்டலூா் உயிரியல் பூங்கா விலங்கியல் மருத்துவா்கள் ஆலோசணை நடத்தினா். பின்பு மலேசியாவிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனா்.அதன்படி நாளை அதிகாலை ஒரு மணி விமானத்தில் மலேசியா திருப்பி அனுப்பப்படுகிறது. தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருக்கலாம் என்று நினைத்து கூடைகளை திறந்து பாா்த்து சோதணையிட்ட
போது சீறிக்கொண்டு எழும்பிய பாம்புகளைக் கண்டு சுங்கத்துறையினா் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்.சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.