சென்னை: பிரபல ஓவியர் இளையராஜா (43) கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று (ஜூன்.06) உயிரிழந்தார். கிராமியப் பெண்களின் தத்ரூபமான ஓவியங்களை வரைந்து புகழ்பெற்றவர் இளையராஜா. இவரது ஓவியங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் பிரபலமான ஓவியக் கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியர் இளையராஜாவின் மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஓவியர்
— வைரமுத்து (@Vairamuthu) June 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
இளையராஜாவின் மறைவால்
வானவில் ஒரு வண்ணத்தை
இழந்துவிட்டது.
இது ஒரு சித்திரச்சாவு.
திராவிடக் கோடுகள் வழியே
பயணப்பட்ட தமிழோவியன்
இளையராஜா.
வருந்துகிறேன்;
இரங்குகிறேன்.
வண்ணக் கிண்ணம் இழந்த
தூரிகைக்கு
யார் ஆறுதல் சொல்வது? pic.twitter.com/C0y7VnZvAe
">ஓவியர்
— வைரமுத்து (@Vairamuthu) June 7, 2021
இளையராஜாவின் மறைவால்
வானவில் ஒரு வண்ணத்தை
இழந்துவிட்டது.
இது ஒரு சித்திரச்சாவு.
திராவிடக் கோடுகள் வழியே
பயணப்பட்ட தமிழோவியன்
இளையராஜா.
வருந்துகிறேன்;
இரங்குகிறேன்.
வண்ணக் கிண்ணம் இழந்த
தூரிகைக்கு
யார் ஆறுதல் சொல்வது? pic.twitter.com/C0y7VnZvAeஓவியர்
— வைரமுத்து (@Vairamuthu) June 7, 2021
இளையராஜாவின் மறைவால்
வானவில் ஒரு வண்ணத்தை
இழந்துவிட்டது.
இது ஒரு சித்திரச்சாவு.
திராவிடக் கோடுகள் வழியே
பயணப்பட்ட தமிழோவியன்
இளையராஜா.
வருந்துகிறேன்;
இரங்குகிறேன்.
வண்ணக் கிண்ணம் இழந்த
தூரிகைக்கு
யார் ஆறுதல் சொல்வது? pic.twitter.com/C0y7VnZvAe
அதில், "ஓவியர் இளையராஜாவின் மறைவால் வானவில் ஒரு வண்ணத்தை இழந்துவிட்டது. இது ஒரு சித்திரச்சாவு. திராவிடக் கோடுகள் வழியே பயணப்பட்ட தமிழோவியன் இளையராஜா. வருந்துகிறேன்; இரங்குகிறேன். வண்ணக் கிண்ணம் இழந்த தூரிகைக்கு யார் ஆறுதல் சொல்வது?" எனக் குறிப்பிட்டுள்ளார்.