டெல்லி சென்று பிரதமரை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " நானும் டாக்டர் அன்புமணி ராமதாஸும் பிரதமர் மோடியை சந்தித்து 20 நிமிடங்கள் பேசினோம். இந்த சந்திப்பில் ஏழு தமிழர்கள் விடுதலை, கோதாவரி காவிரி இணைப்பு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது குறித்து விரிவாகப் பேசினோம்.
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் சந்திப்பதற்கு தமிழ்நாட்டை குறிப்பாக மகாபலிபுரத்தை தேர்ந்தெடுத்ததற்கு பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன். " என்றார்
இதையும் படிங்க: ’ஆந்திராவில் மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன்’