ETV Bharat / state

'தாயாரையும் இழிவுபடுத்தும் திமுகவின் கருத்துகள் அருவருப்பானவை!' - 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் ஒப்பீடு செய்யும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் அருவருக்கத்தக்கவை. பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட பேச்சுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PMK Ramadas condemns DMK insult to Edappadi Palanisamy and his mother

author img

By

Published : Mar 27, 2021, 4:16 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் கட்சிகளின் மக்கள் நலப் பணிகளை எடை போடுவதற்கான களம் தேர்தல். அத்தகையத் தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் சாதனைகளையும், எதிர்க்கட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகளின் அடிப்படையிலான குறைகளையும் மக்கள் முன்வைத்து ஆதரவைத் திரட்டுவது நாகரிகம்.

ஆனால், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைகளில் திமுக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தனிநபர் தாக்குதல்களையே தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. சசிகலாவையும், முதலமைச்சரையும் இழிவுபடுத்தும் வகையில் அருவருக்கத்தக்க ஒரு கருத்தை திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். மேலும், அவரை ஸ்டாலின் காலணிகளுடனும் ஒப்பிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதன் உச்சமாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, முதலமைச்சரின் பிறப்பையும், மறைந்த அவரது தாயாரையும் இழிவுபடுத்தும் வகையில் சொற்களைக் கொட்டியிருக்கிறார்.

அரசியல் வரலாற்றிலும், பயணத்திலும் மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல. அதிமுகவில் கிளைச் செயலாளராகப் பணியைத் தொடங்கி, முதலமைச்சராக முன்னேறியுள்ள பழனிசாமிதான் அரசியல் திறன்மிக்கவர். இருவரையும் ஒப்பிடுவதற்கு எவ்வளவோ நாகரிகமான சொற்கள் இருக்கும்போது, இத்தகைய சொற்கள் திமுகவின் தரத்தை அம்பலப்படுத்துகின்றன.

தொடக்கத்திலிருந்தே திமுகவுக்குப் பெண்களை மதிப்பது என்றால் என்னவென்றே தெரியாது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவமானப்படுத்தியது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவை மானபங்கப்படுத்தி தாக்கியது எனப் பட்டியல் நீள்கிறது.

தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் பேசப்பட வேண்டியவை பிரச்சினைகள் தானே தவிர, பிறப்புகள் குறித்த அவதூறுகள் அல்ல. முதலமைச்சரைப் பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லாததால்தான் திமுக இத்தகைய பரப்புரையை முன்னெடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. திமுக இத்தகைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அரசியலில் இத்தகைய அணுகுமுறையை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. பெண்மையைப் போற்றுபவர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் திமுக கூட்டணி கட்சிகளும், பிற கட்சிகளும் இதைக் கண்டிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களின் அரசியல் நேர்மை குறித்த ஐயங்களை ஏற்படுத்துகிறது. இதற்கான தீர்ப்பினை மக்கள் வரும் தேர்தல் நாளன்று வழங்குவார்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.