இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு ஆணை எதிர்பார்த்த அளவிற்கு பயனளிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கி 70 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், நேற்றுவரை 6,095 சோதனைகள் மட்டும்தான் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 87 சோதனைகள் மட்டும் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் அரசுத் தரப்பிலும், தனியார் தரப்பிலும் சேர்த்து 20 கரோனா ஆய்வு மையங்கள் உள்ளன. அவற்றில் ஒரு மையத்திற்கு, ஒரு நாளைக்கு சராசரியாக 4.40 சோதனைகள் மட்டும்தான் செய்யப்பட்டுள்ளன. இது போதுமான எண்ணிக்கை அல்ல. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு 10 லட்சம் பி.சி.ஆர் (Polymerase Chain Reaction) சோதனைக் கருவிகளை வாங்கியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 20 சோதனை மையங்களில் ஒரு நாளைக்கு முதல் பிரிவு பணியில் 1,300 மாதிரிகளையும், இரண்டாவது பிரிவு வேலைகளில் 2,500 மாதிரிகளையும் ஆய்வு செய்ய முடியும். தமிழ்நாட்டிற்கு மட்டும் குறைந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் கிடைக்கக்கூடும் என்பதால் தொண்டை சளி ஆய்வுகளை அதிகரிக்கலாம். தமிழ்நாட்டில் கரோனா ஆய்வுகளை இப்போது இருப்பதைவிட குறைந்தது 10 மடங்காவது அதிகரிக்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் கரோனா சோதனைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும்.
அவ்வாறு செய்வதன் மூலம், நீட்டிக்கப்படவிருக்கும் ஊரடங்கு முடிவடைவதற்குள் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தி, கரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக மாற்றிவிட முடியும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘ஏப்ரல் 15 முதல் ரயில்களை இயக்கும் திட்டமில்லை!’ - இந்திய ரயில்வே விளக்கம்