ETV Bharat / state

விளையாட்டுகள், பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த சட்டத் திருத்தமா? ராமதாஸ் கண்டனம்! - பாமக சார்பில் கண்டனம்

PMK founder Ramadoss: 1937ஆம் ஆண்டின் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான சட்டத் திருத்த முன்வரைவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள அரசின் நடவடிக்கை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 10:09 PM IST

சென்னை: 1937ஆம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்ற இடங்களில் மது அருந்துவதற்கு அனுமதி அளிக்கும் முடிவை, தமிழக அரசு கடந்த மார்ச் 18ஆம் தேதி அரசிதழில் வெளியிட்ட போதே, அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது.

அதைத் தொடர்ந்து திருமண அரங்குகளில் மது அருந்த அனுமதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. ஆனாலும், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகளிலும் மது வினியோகம் செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களைக் காப்பதில் கவனம் செலுத்தாமல், மது வணிகம் செய்வதில் கவனம் செலுத்துவதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் அது தான். மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாகவும், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பதால் தான் வேறு வழியின்றி மது வணிகம் செய்வதாகவும் தமிழக அரசு கூறி வருகிறது" என்று சாடி இருந்தார்.

இதையும் படிங்க: சென்னையில் பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி: யார் யாரெல்லம் முன்பதிவு செய்யலாம்?

தொடர்ந்து, "இது தான் தமிழக அரசின் உண்மையான நிலைப்பாடு என்றால், மது வணிகத்தை எந்தெந்த வகைகளில் குறைக்க வேண்டுமோ, அந்தந்த வகைகளில் குறைக்க வேண்டும். அதற்கு மாறாக தானியங்கி மது வழங்கும் எந்திரங்களை அறிமுகம் செய்தல், குடிப்பவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக புதுப்புது மது வகைகளை அறிமுகம் செய்தல், பன்னாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டிகளின் போதும் மது விற்பனை செய்தல் போன்ற செயல்களில் அரசு ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் ஆகும்" என்று பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தயாநிதி மாறன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.99,999 திருட்டு.. OTP இல்லாமலே கைவரிசை.. டிஜிட்டல் இந்தியா மீது சாடல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.