ETV Bharat / state

இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு அன்புமணி பாராட்டு - Anbumani ramdoss

சென்னை: விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையை சுற்றி வரத் தொடங்கியுள்ளது. இந்த சாதனையை படைத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

anbumani
author img

By

Published : Jul 22, 2019, 9:58 PM IST

இது குறித்து அவர் கூறுகையில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவுக்கு விண்கலம் அனுப்பும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. அடுத்த 48 நாட்களுக்கு புவிவட்டப் பாதையை சுற்றிவரும் சந்திரயான் 2 செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி அல்லது 7ஆம் தேதி நிலவில் இறக்கப்படவுள்ளது. பாகுபலி என்று அழைக்கப்படும் ஜி.எஸ்.எல்.வி மேக் 3 ஏவுகணை எந்த தடுமாற்றமும் இல்லாமல் அதன் இலக்கை சென்றடைந்திருக்கிறது. சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பியதன் மூலம் இந்தியா ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறது.

சந்திரயான்2 உருவாக்கத்தில் பெண் விஞ்ஞானிகள் பங்கு இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த வனிதாமுத்தையா தான் சந்திரயான் 2 திட்ட இயக்குனர் ஆவார். இவர் தவிர மிஷன் இயக்குனர் ரீது காரித்வாலும் பெண் விஞ்ஞானி ஆவார். அதோபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த வளர்மதியும் இதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.இந்த சாதனையில் முக்கிய பங்கு வகித்த அனைவருக்கும் பாமக சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Intro:nullBody:சென்னையை அடுத்த ஸ்ரீஹரிஹோட்டா ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி மேக்-3 ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் -2 விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையை சுற்றி வரத் தொடங்கியுள்ளது. இந்த சாதனையை படைத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் சிவன் உள்ளிட்ட அனைத்து அறிவியலாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட ஏவுகலன் அடுத்த 16.55 நிமிடங்களில் புவிவட்டப் பாதையை சென்றடைந்து, சந்திரயான்-2 விண்கலத்தை புவிவட்டப் பாதையில் செலுத்தியது. அடுத்த 48 நாட்களுக்கு புவிவட்டப்பாதையை சுற்றிவரும் சந்திரயான் -2 செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி அல்லது 7-ஆம் தேதி நிலவில் இறக்கப்படவுள்ளது. பாகுபலி என்று அழைக்கப்படும் ஜி.எஸ்.எல்.வி மேக்-3 ஏவுகலன் எந்த தடுமாற்றமும் இல்லாமல் அதன் இலக்கை சென்றடைந்திருக்கிறது.

சந்திரயான் -2 விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பியதன் மூலம் இந்தியா ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவுக்கு விண்கலம் அனுப்பும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. தொடக்கத்தில் ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்த சந்திரயான்-2 விண்கலம் ஏவுகலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகளால் ஒரு வாரம் தாமதமாகத் தான் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனாலும், விண்கலத்தின் பயண நேரத்தை குறைத்து திட்டமிடப்பட்ட நாளிலேயே நிலவில் சந்திரயானை தரையிறக்க இஸ்ரோ அறிவியலாளர்கள் முடிவு செய்திருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய அறிவியலாளர்கள் எந்த அளவுக்கு வல்லமை பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது; இது பெருமிதம் அளிக்கிறது.

சந்திரயான் -2 இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் அனைவரும் பெண் அறிவியலாளர்கள் என்பது ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த வனிதா முத்தையா தான் சந்திரயான் -2 திட்ட இயக்குனர் ஆவார். இவர் தவிர மிஷன் இயக்குனர் ரீது காரித்வாலும் பெண் அறிவியலாளர் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த வளர்மதியும் இந்த இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். அவர்களுக்கும், இஸ்ரோ தலைவர் கே.சிவன்  உள்ளிட்ட பிற அறிவியலாளர்களுக்கும் பா.ம.க. சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தியாவால் சில ஆண்டுகளுக்கு முன் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் -1 விண்கலம் அமெரிக்காவின் நாசா வியக்கும் அளவுக்கு பல சாதனைகளை படைத்தது. அதேபோல், சந்திரயான் -2 திட்டமிட்டபடி சரியான நேரத்தில், சரியான இடத்தில் நிலவில் இறங்கவும், இதுவரை கண்டுபிடிக்கப் படாத நிலவு குறித்த உண்மைகளை கண்டறியவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.