காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இம்மாதம் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை மூன்று நாள்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்து ஒப்பந்தம், உடன்படிக்கைகள் குறித்து கலந்தாய்வு நடத்தவுள்ளனர்.
இவர்களது சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முதல் நாள் (அக்டோபர் 11) - வெள்ளிக்கிழமை |
மதியம் 01.30 | சென்னை விமான நிலையம் வந்தடைதல், |
விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு மற்றும் கலாசார முறைப்படி வரவேற்றல் | |
மதியம் 01.45 | சென்னை விமான நிலையத்திலிருந்து தனியார் சொகுசு விடுதியான ஐ.டி.சி. கிராண்ட் சோழாவுக்கு புறப்படல் (ITC Grand Chola) |
மதியம் 01.55 | ஐ.டி.சி. கிராண்ட் சோழாவுக்கு வந்தடைதல் (ITC Grand Chola) |
மாலை 04.10 | ஐ.டி.சி. கிராண்ட் சோழாவிலிருந்து மகாபலிபுரத்திலுள்ள அர்சுனன் தபசுவிற்கு சென்றடைதல் |
மாலை 05.00 | அர்சுனன் தபசுவில் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபரை வரவேற்றல் |
இருநாட்டுத் தலைவர்களின் முதல் சந்திப்பு | |
அர்சுனன் தபசுவில் இருநாட்டு தலைவர்களும் புகைப்படம் எடுத்தல் | |
அர்சுனன் தபசுவின் வரலாறு குறித்து பிரதமர் மோடி சீன அதிபருக்கு விளக்குதல் | |
மாலை 05.10 | அர்சுனன் தபசுவிலிருந்து புறப்படல் |
மாமல்லபுர கடற்கரை அருகிலுள்ள கிருஷ்ணா வெண்ணெய் பந்து பகுதியில் சிறிது நேர நடைபயணம் | |
மாலை 05.15 | கிருஷ்ணா வெண்ணெய் பந்து பகுதியிலிருந்து புறப்படல் |
மாலை 05.18 | மாமல்லபுர ரதக் கோயிலுக்கு வந்தடைதல் |
அங்குள்ள கலைப் படைப்புகளை பார்வையிடல் | |
இருநாட்டுத் தலைவர்களின் வருகைக்காக அமைக்கப்பட்ட பகுதியில் சிறிது நேர இடைவேளை | |
மாலை 05.40 | ரதக் கோயிலிலிருந்து புறப்படல் |
மாலை 05.43 | கடற்கரை கோயிலுக்கு வந்தடைதல் |
கடற்கரை கோயிலை பார்வையிடல் | |
மாலை 05.55 | கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிடல் |
மாலை 06.00 மணி முதல் 6.30 மணிவரை | கலாஷேத்திர கலை நிகழ்ச்சிகள் |
மாலை 6.30 மணி முதல் 06.45 மணிவரை | விருந்தினர்கள் அறையில் ஓய்வு |
மாலை 6.45 முதல் இரவு 08.00 மணிவரை | கடற்கரை கோயிலில் இரவு உணவு |
இரவு 08.05 | கடற்கரை கோயிலிலிருந்து ஐ.டி.சி. கிராண்ட் சோழாவுக்கு புறப்படல் |
இரவு 09.55 | ஐ.டி.சி. கிராண்ட் சோழாவுக்கு வந்தடைதல் |
இரண்டாம் நாள் (அக்டோபர் 12) - சனிக்கிழமை |
காலை 09.00 | ஐ.டி.சி. கிராண்ட் சோழாவிலிருந்து தாஜ் ஃபிஷ்ஷர்மேன்'ஸ் கோவ் (ITC Grand Chola to Taj Fishermen's cove) உணவகத்திற்கு புறப்படல் |
காலை 09.40 | தாஜ் ஃபிஷ்ஷர்மேன்'ஸ் கோவ் உணவகம் வந்தடைதல் |
காலை 09.45 | தாஜ் ஃபிஷ்ஷர்மேன்'ஸ் கோவ் உணவகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி |
காலை 10.00 மணி முதல் 10.15 வரை | மச்சான் (Machan) உணவகம் வரை மரங்களின் நிழல் வழியே சிறிது நேரம் நடைப்பயிற்சி |
காலை 10.15 முதல் 11.15 வரை | டெட்-இ-டெட் (Tete-e-tete) சிற்றுண்டி உணவகத்தில் தேநீர் இடைவேளை |
காலை 11.15 மணி முதல் 11.25 வரை | பாதுகாக்கப்பட்ட இடத்தில் சிறிது நேரம் இளைப்பாறுதல் |
காலை 11.25 | பின்னர் அங்கிருந்து டான்கோ ஹாலுக்குப் புறப்படல் (Tango Hall) |
காலை 11.30 மணி முதல் 12.15 வரை | உயர்மட்ட அலுவலர் குழுவினருடனான பேச்சுவார்த்தை |
மதியம் 12.15 மணி முதல் 1.15 வரை | கசாரினா உணவக விடுதியில் (Casuarina Hall) மதிய உணவு |
மதியம் 1.15 | கசாரினா விடுதியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு புறப்படல் |
மாலை 04.00 | சென்னை விமான நிலையம் வந்தடைதல் |
இருநாட்டுத் தலைவர்களுக்கும் உபசார விழா | |
மாலை 04.10 | சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படல் |