ETV Bharat / state

பிரதமர் ராணுவத்திற்கு அர்ப்பணித்த அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கியின் முக்கிய சிறப்பம்சங்கள்! - அர்ஜூன் மார்க் 1ஏ

சென்னை: பிரதமர் மோடி ராணுவத்திற்கு அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கியை அர்ப்பணித்துள்ளார். உலகின் துல்லியமான இந்த டாங்கியின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்...

மோடி
மோடி
author img

By

Published : Feb 14, 2021, 12:01 PM IST

Updated : Feb 14, 2021, 2:08 PM IST

தமிழ்நாட்டில் சென்னைக்கு இன்று (பிப்.14) வருகை தந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக அர்ஜூன் மார்க் 1ஏ (Arjun Main Battle Tank Mark 1A) ரகப் போர் டாங்கியை ராணுவத்துக்கு அர்ப்பணித்தார்.

இந்த டாங்கியின் முக்கிய அம்சங்கள்:

  • அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் Combat Vehicles Research and Development Establishment தயாரிக்கப்பட்டது.
    மோடி
    அர்ஜூன் மார்க் 1A டாங்கி
  • இந்த அதிநவீன டாங்கி ராணுவத்துடன் இணைந்து முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டதாகும். இதன் வடிவமைப்பில் 15 இந்திய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் பங்கெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஏற்கெனவே டிஆர்டிஒ (DRDO) வசமுள்ள அர்ஜூன் டாங்கி மார்க் 1 ரக டாங்கியின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பே மார்க் 1ஏ ரக டாங்கி. அண்மையில், முக்கிய ராணுவப் பகுதியை பார்வையிடச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அர்ஜூன் மார்க் 1 ரகப்போர் டாங்கியில் பயணித்தார். இதுபோன்று 124 டாங்கிகள் ஆவடி கனரக தொழிற்சாலையில் உற்பத்தி செய்து ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
  • தற்போது அர்ஜூன் மார்க் 1 ரக டாங்கியில் 71 மேம்பாடுகளுடன் அர்ஜூன் மார்க் 1ஏ ரக டாங்கி உருவாக்கப்பட்டுள்ளது.
  • அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கிகளின் வேகம் மற்றும் தாக்கும் திறன் சிறந்த வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டில் உள்ள மற்ற டாங்கிகளை எல்லாம்விட இது விரைந்து பயணிக்கும் என்றும், சமதளத்தில் அனைத்து வித நிலப்பரப்பிலும் இது இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, இது 'பாலைவன ஃபெர்ராரி' என அழைக்கப்படுகிறது.
  • அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கிகள் பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும், வாகனம் நிறுத்தியிருக்கும் போதும் நகர்ந்து சென்றுகொண்டிருக்கும்போது இலக்கை மிகச்சரியாக குறிவைத்து தாக்க முடியும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • முதல் சுற்றிலேயே எதிரிகளை சரியாக தாக்குவதில் உலகிலேயே மிகத்துல்லியமான டாங்கி மார்க் 1ஏ, இதில் டிஆர்டிஓ-வின் கன்சன் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது.
  • மார்க் 1ஏ ரக டாங்கிகளின் செயல்பாடு மீது ராணுவத்துக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் 113 டாங்கிகள் செய்ய ஆவடி கனரக தொழிற்சாலைக்கு ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உற்பத்தியில் 200 நிறுவனங்களுக்கு மேல் ஈடுபடும் என்றும், 8 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 8 ஆண்டுகளுக்கு சுமார் 8 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அர்ஜூன் மார்க் 1 டாங்கிகள் ஏற்கெனவே மேற்குப் பகுதியில் பாகிஸ்தானை ஒட்டியுள்ள பாலைவனத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. புதிதாக தயாரிக்கப்படும் அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கிகளும் அவற்றுடன் இணைந்துகொள்ளும் என ராணுவ அலுவலர்கள் கூறுகின்றனர்.
    மோடி
    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி
  • இந்திய ராணுவம் இந்த புதிய டாங்கி மூலம் மிகப்பெரிய அளவில் பயனடையும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி கூறினார். இது தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு மேலும் வலுசேர்க்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 14, 2021, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.