ETV Bharat / state

தமிழ்நாடு அரசுக்கு பிரதமர் பாராட்டு - புரெவி புயல் முதலமைச்சருடன் பிரதமர் ஆலோசனை

PM modi discussion with TN CM on cyclone issue

author img

By

Published : Dec 2, 2020, 7:01 PM IST

Updated : Dec 2, 2020, 9:44 PM IST

19:00 December 02

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள “புரெவி” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது நிவர் புயல் பாதிப்பை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசுக்கு தனது பாராட்டை பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் இன்று (டிச.2) மாலை தொலைபேசியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசு எடுத்த “நிவர்” புயல் முன்னெச்சரிக்கை, மீட்பு நடவடிக்கைகளினால் உயிரிழப்பு குறைக்கப்பட்டதற்காகவும், விரைந்து மாநிலத்தில் இயல்பு நிலையைக் கொண்டு வந்ததற்காகவும், முதலமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் பாராட்டினார். மேலும், தற்போது வடமேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள “புரெவி” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாரதப் பிரதமர் மோடியிடம், சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் டிசம்பர் 1 ஆம் தேதி “புரெவி” புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி, விரிவான அறிவுரைகளை வழங்கியதையும், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து, மாவட்டங்களில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட அறிவுறுத்தியதையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக, பத்திரமாக கரை திரும்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 473 விசைப்படகுகள் பத்திரமாக கரை திரும்பியுள்ளதையும், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள பொது மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் பிரதமரிடம் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் கன்னியாகுமரி (2), திருநெல்வேலி (3), தூத்துக்குடி (2) மற்றும் இராமநாதபுரம் (3)  மாவட்டங்களில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும், 24 மணி நேரமும் செயல்படும் மாநில மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில் கூடுதல் அலுவலர்களுடன் செயல்பட அறிவுறுத்தியது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை பிரதமரிடம் விளக்கிக் கூறினார்.  

அதற்கு பிரதமர், தமிழ்நாடு  அரசிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அனைத்து வகையிலும் மத்திய அரசு உதவுவதாக தெரிவித்தார் என்று தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Dec 2, 2020, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.