ETV Bharat / state

பிளஸ்டூ பொதுத்தேர்வு: கணக்கு, விலங்கியல், வணிகவியல் தேர்வுகள் கடினம்!

சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணக்கு, விலங்கியல், வணிகவியல் பாடத் தேர்வுகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ்டூ பொதுத்தேர்வு
author img

By

Published : Mar 7, 2019, 6:43 PM IST

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு முக்கியமாக கருதப்படும் கணக்கு, விலங்கியல் பாடத்திற்கான தேர்வுகள் இன்று நடைபெற்றன.

இதுகுறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது,

12th exam
பிளஸ்டூ பொதுத்தேர்வு
கணக்குப் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவிற்கு கேட்கப்பட்ட 20 வினாக்களில் 9 கேள்விகள் சிந்தித்து எழுதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் 2 மதிப்பெண் வினாவில் ஐந்து மதிப்பெண்ணுக்குரிய வினாக்கள் 2 கேட்கப்பட்டிருந்தன. இதனால் மாணவர்களின் நேரம் வீணாக வாய்ப்புள்ளது. பெரும்பாலான வினாக்கள் சிந்தித்து விடை அளிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருந்தன.

அதேபோல் விலங்கியல் பாடத்திலும் வினாக்கள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டிருந்தன. 1, 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் பெரும்பாலும் கடினமாக இருந்தன. ஆனால் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் எந்தவித பிரச்னையும் இல்லை. வணிகவியல் பாடத்தில் முதல் முறையாக கேள்வித்தாள் முறை மாற்றியமைக்கப்பட்டிருந்தது. அதில் 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவை மிகவும் கடினமாகவே அமைந்திருந்தன.

அதேபோல் 3 மற்றும் 2 மதிப்பெண் வினாக்களும் கடினமாக இருந்தன. 5 மதிப்பெண் வினாக்களை மாணவர்கள் எளிதில் எழுதும் வகையில் இருந்தது. இந்தப் பாடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் எந்த வித பிரச்னையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் 100 சதவிகித மதிப்பெண் பெறுவது என்பது மிகுந்த சிரமத்திற்கு உரியது என மாணவர்கள் கூறினர்.

Intro:Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.