பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி விழுக்காடு அதிகரித்தாலும் மாணவர்களின் மதிப்பெண்கள் அதிகரிக்கவில்லை என்பது பெரும்பாலானவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மாணவர்கள் இன்று முதல் ஜூலை 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்தது.
அதன்படி, பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகள் மூலம் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். சென்னை சேத்துப்பட்டு எம்சிசி மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் முக்கிய பாடங்களின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர்.
இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில், “முக்கிய பாடங்களின் மதிப்பெண்கள் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை. இதனால் விடைத்தாள் நகல் பெற்று அதனை சரிபார்த்து, பின்னர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க உள்ளோம்” என்றனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு