சென்னை: மூத்தப் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். வாணி ஜெயராம் குறித்து தனது நினைவலைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார், பின்னணி பாடகி மஹதி.
அவர் கூறும் போது, “வாணி ஜெயராமுக்கு எனது பாடல்கள் மிகவும் பிடிக்கும் . நான் சினிமா பாடல்களை பாடுவதைக் காட்டிலும் கர்நாடகப் பாடல்களைப் பாடுவது மிகவும் பிடிக்கும். அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவித்தபோதுகூட அவரை வாழ்த்தி பதிவு போட்டிருந்தேன். ஆனால், அதனை வாங்காமலேயே அவர் மறைந்துவிட்டது மிகவும் வருத்தமாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பாடகி வாணி ஜெயராம்க்கு 30 குண்டு முழங்க இறுதி மரியாதை - மு.க.ஸ்டாலின் உத்தரவு!