ETV Bharat / state

கரோனா பாதிப்பு: இணை நோய் உடையவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர்

author img

By

Published : Jun 5, 2021, 11:21 PM IST

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுடைய நபர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி வழங்கப்படவுள்ளன.

Plan to provide pulse oximeter for people

கரோனா தொற்றால் பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை மேற்கொள்வதற்கு மாநகராட்சியின் சார்பில் தன்னார்வலர்கள் (Focus Volunteers) பணியமர்த்தப்பட்டு நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை அளித்து வருகின்றனர்.

இந்த தன்னார்வலர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீட்டிற்கு நாள்தோறும் இருமுறை சென்று அவர்களிடம் அடிப்படை தேவைகள் குறித்தும், உடல் நலம் குறித்தும் கேட்டறிந்து அதுகுறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட வார்டு அல்லது மண்டல மருத்துவ குழுவினரிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

கண்காணிப்பினை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் (Pulse Oximeter) வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுடைய கரோனா தொற்று பாதித்த நபர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டு சொந்தமாக பல்ஸ் ஆக்சிமீட்டர் வாங்க வசதியில்லாத வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களைச் சார்ந்த நபர்களுக்கு அந்த பகுதியை சார்ந்த தன்னார்வலர்கள் மூலமாக பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்கப்படவுள்ளது.

இந்த பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு நோயாளிகள் நாள்தோறும் தங்கள் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினை இருமுறை கண்காணித்து தன்னார்வலர்களிடம் தெரிவிக்க வேண்டும். தொற்று பாதித்த நபர் முழுவதும் குணமடைந்தவுடன் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை சம்பந்தப்பட்ட தன்னார்வலர் மூலமாக மாநகராட்சியில் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தன்னார்வலர்களிடமிருந்து 10 ஆயிரத்து 400 பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன. தொற்று கண்காணிப்புப் பணிகளை மேலும் தீவிரபடுத்தும் வகையில் ஆர்வமுள்ள நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர் போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உபகரணங்களை வழங்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மாநகராட்சியின் மாநகர நல அலுவலர் அலுவலகத்தில் 94983 46492 எண்ணில் தொடர்புகொண்டு பல்ஸ் ஆக்சிமீட்டர் போன்ற உபகரணங்களை நன்கொடையாக வழங்கலாம்" என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.